உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும் – கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இன்று (18) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாறை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த இடி மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

இடி மின்னல் அனர்த்தங்களால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

கடந்த 48 மணித்தியாலங்களில் 30 பேர் பலி

வெலி ஓயாவில் நீராடச் சென் காணாமல்போன இருவரின் சடலங்கள் மீட்பு

கொரொனோ வைரசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் எம்மை தைரியப்படுத்துங்கள் – GMOA