தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மழை மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, மண்சரிவு எச்சரிக்கை இவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை, மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல மற்றும் அம்பன்கோறளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை (நிலை 2) விடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பதுளை மாவட்டத்தின் ஹல்தும்முல்ல மற்றும் ஊவபரணகம, காலி மாவட்டத்தின் நெலுவ, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, கண்டி மாவட்டத்தின் தெல்தோட்ட மற்றும் தொழுவ, கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, ருவான்வெல்ல, அரநாயக்க மற்றும் ரம்புக்கனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் முதலாம் கட்ட எச்சரிக்கையின் (நிலை 1) கீழ் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குருநாகல் மாவட்டத்தின் அலவ்வ மற்றும் ரிதீகம, மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல, ரத்தோட்டை, யட்டவத்த, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தற, மொனராகலை மாவட்டத்தின் மெதகம, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, ஹங்குராங்கெத்த, வலப்பனை, இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, இம்புல்பே, எஹெலியகொட மற்றும் வெலிகெபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன