உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை – பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, ஊவா, வடமேல் மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு இன்று (17) பிற்பகல் 12:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது, இப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

எரிபொருள் ரயிலுடன் பேரூந்து ஒன்று மோதி விபத்து [PHOTOS]

யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு!

editor