உலகம்

ராஜஸ்தானில் திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ் – 20 பேர் பலி

ராஜஸ்தானில் தனியார் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்த கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று (14) மாலை, ஜெய்சால்மரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.

சில நிமிடங்களில், பேருந்து முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்தில் 20 பேர் உயிரிழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் 14 க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து குறித்துக் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, விபத்து நடந்த இடத்திற்கு நேரில் விரைந்தார்.

பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

ஜப்பானில் நிலநடுக்கம்

editor

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடரும் – இஸ்ரேல் பிரதமர்

பொதுப் போக்குவரத்திற்கு தற்காலிக தடை