அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் ஹரிணி நாடு திரும்பினார்

மக்கள் சீனக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 14 ஆம் திகதி பீஜிங்கில் அமைந்திருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்தார். இந்தப் விஜயமானது, கட்சியின் வரலாற்றுப் பயணம் உள்ளிட்ட சீனாவின் பல தசாப்த கால சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் பற்றிய ஆழமான புரிதலைப் பெற அவருக்கு ஓர் வாய்ப்பாக அமைந்தது.

அருங்காட்சியக விஜயத்தைத் தொடர்ந்து, பிரதமர் பீஜிங்கில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரகத்திற்கு விஜயம் செய்தார். அங்கே,Huawei Technologies பிரதிநிதிகள், இலங்கையின் கல்வித் துறைக்கான சாத்தியமான பயன்பாடுகளைப் பற்றிப் பிரதமரிடம் எடுத்துரைத்ததோடு, ஸ்மார்ட் வகுப்பறை (Smart Classroom) பற்றிய அவர்களது கருத்துப்படிவத்தினைப் பிரதமரிடம் சமர்ப்பித்தனர்.

பீஜிங்கில் தனது உத்தியோகபூர்வ நிகழ்வுகளை நிறைவு செய்து கொண்ட பிரதமர், நேற்று இரவு இலங்கை திரும்பினார்.

-பிரதமர் ஊடகப் பிரிவு

வீடியோ

Related posts

இலங்கையின் முதல் நீர் மின்கலம் மின்சார திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

editor

நாடு முழுவதும் மின் தடை – குரங்கு தான் காரணம் – அமைச்சர் குமார ஜெயக்கொடி

editor

இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை