உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனை கிண்ணயடியில் கசிப்பு விற்பணை – ஒருவர் கைது – ஐந்து பெண்களுக்கு பிணை!

வாழைச்சேனை கிண்ணயடி பிரம்படித்தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பணையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரை கைது செய்வதற்கு தடையாக இருந்த ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி கே.எஸ்.பி.அசங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக கிண்ணயடி பிரம்படித்தீவு ஆற்றில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த பத்து பரல்களில் இருந்து ஆயிரத்தி அறுநூற்றி என்பத்தைந்து (1685) லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தார்.

கசிப்பு உற்பத்தியுடன் தொடர்புடையவர்என்ற சந்தேகத்தின் பெயரில் அதே பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்.

Related posts

சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது அவசரகால சட்டம் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor

வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லையா ? தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

editor

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பிற்கும் இராணுவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை