உள்நாடுபிராந்தியம்

குருநாகல் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – ஒருவர் கைது

குருநாகல், குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பெப்போலேவெல, குடா கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 34 வயதானவர் என தெரியவந்துள்ளது.

விசாரணையில், குறித்த நபர் தனது சகோதரரின் வீட்டில் வேறொரு குழுவுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது, சகோதரருடன் ஏற்பட்ட முறுகல் நிலைய தீவிரமடைந்ததில் சகோதரர் அவரை வாளால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்ட சோலார் மின்சார திட்டத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு

editor

வார இறுதி நாட்களுக்கான ஒரு மணிநேர மின்வெட்டு

இலங்கை அணிக்கு மீண்டும் அபராதம்

editor