அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி விமல் வீரவன்சவுக்கு மீண்டும் பொலிஸ் அழைப்பாணை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவுக்கு வாக்கு மூலம் வழங்க இன்று திங்கட்கிழமை (13) மீண்டும் முன்னிலை ஆகுமாறு தங்காலை பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

இருப்பினும், இன்றையதினம் முன்னிலையாக முடியாமை குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும், வேறொரு நாளில் ஆஜராவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், புவக்தண்ட பகுதியைச் சேர்ந்த சானா என்பவரின் அரசியல் தொடர்புகள் குறித்து, தங்காலை குற்றப்பிரிவுக்கு அவர் முன்னர் அளித்த அறிக்கையை, திரிபுபடுத்தி பொதுவில் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, தேசிய பொலிஸ் ஆணையகத்தில் முறைப்பாடு அளித்து, சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் – பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

வீடு திரும்பிக் கொண்டிருந்த தாயும் மகனும் ரயிலில் மோதி படுகாயம்

editor