உள்நாடுபிராந்தியம்

நாரம்மல பகுதியில் விபத்தில் சிக்கிய லொறி – இருவர் பலி

நாரம்மல, அலஹிடியாவ பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் பின்புறத்தில் பயணித்த இருவர் அதில் நசுங்கி காயமடைந்த நிலையில் நாரம்மல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் வவுனியா மற்றும் நெடுங்கேணியைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

SJB 22வது திருத்தத்திற்கு நிபந்தனை அடிப்படையில் ஆதரவு

எட்டாவது பாராளுமன்றத்தின் 4வது கூட்டத் தொடர் நாளை

கூட்டத்திலிருந்து திடீரென எழுந்து சென்ற கந்தசாமி பிரபு எம்.பி. இதுதானா உங்கள் நல்லாட்சி என கேள்வி?

editor