உள்நாடு

ஜனாதிபதி செயலகத்திற்கு நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் வருகை

களுத்துறை வேலபுர, கிரம தம்மானந்த, சம்மாந்துறை அல் அர்சாத் கல்லூரிகள் மற்றும் ரிகில்லகஸ்கட பொரமடுல்ல மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற மக்கள் தொடர்பாடல் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்துகின்றன.

இந்த நிகழ்வில், ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் கபில பண்டாரவினால் எதிர்கால தலைமைத்துவம் மற்றும் ஒரு தலைவரிடம் இருக்க வேண்டிய குணாதிசயங்கள் குறித்து காத்திரமான சொற்பொழிவாற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியுடன் இணைந்ததாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில், பாடசாலைகளுக்கு பெறுமதியான மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

ஜனாதிபதி செயலக முப்படை ஒருங்கிணைப்பு பிரிவின் பணிப்பாளர் எயார் கொமதோர் ஆசிரி கால்லகே, அதன் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீகா தங்கொல்ல மற்றும் மேற்படி பாடாசலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Related posts

ஜனாதிபதி அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

editor

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை மீண்டும் சந்தித்தனர்

editor

“அடுத்த ஆண்டு மற்றுமொரு பொருளாதாரப் பேரழிவு”