உள்நாடுபிராந்தியம்

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு சேவை நலன் பாராட்டு

மூதூர் பிரதேச சுகாதார வைத்திய பணிமனை அதிகாரி வைத்தியர் நூர் முகம்மது கஸ்சாலி அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு கடந்த (09) வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வு சேனையூர் பிரதேச பொது மக்கள், சேனையூர் சனசமூக அபிவிருத்தி நிலையம், மற்றும் சேனையூர் வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் சேனையூர் வைத்தியசாலையில் நடைபெற்றது.

வைத்தியர் நூர் முகம்மது கஸ்சாலி அவர்கள் சேனையூர் வைத்தியசாலையில் பணியாற்றிய காலப்பகுதியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள், சுகாதார முகாம்கள், பாடசாலைகளில் மாணவர்களுக்கான இலவச வைத்திய பரிசோதனைகள் மற்றும் நோயாளிகளுக்கு ஆலோசனைகள் பேன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து பொதுமக்களின் நம்பிக்கையையும் பாசத்தையும் பெற்றிருந்தார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு அவரை கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

இராணுவத் தளபதி யாழ். விஜயம்

கடுவலையில் வீதியில் கிடந்த துப்பாக்கிகள்

editor

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு பாராட்டு