உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில், குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தில், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இதனால் ஏற்படும் மின்னல் ஆபத்துகளை குறைக்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மின்னல் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க, மரங்கள் மற்றும் உயரமான பொருட்களுக்கு அருகில் நிற்பதைத் தவிர்க்கவும், மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதை குறைக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related posts

அரசுக்கான இறுதி எச்சரிக்கை இது – CEB

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் 124 பேர் கைது!-03 லட்சத்துக்கும் மேல் அபராதம்

தணிக்கை சபை ரத்து!