உள்நாடுகாலநிலை

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்

கிழக்கு, மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை நேரங்களில் மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

வெள்ள நீரை வடிந்தோட செய்வது தொடர்பாக இம்ரான் எம். பி மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு

editor

பாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன நியமனம்

சீனி நிறுவனங்கள் தொடர்பில் வௌியான முக்கிய தகவல்!