உள்நாடுவிசேட செய்திகள்

ஐ.நா பொதுச்சபை தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிப்பு

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இது குறித்த தீர்மானத்தை ஏற்கப்போவதில்லை என, ஏற்கனவே இலங்கை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் ஆதரவுடன் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இப்பிரேரணையை வாக்கெடுப்பின்றி ஏற்றுக் கொள்வதாக, சபைத் தலைவர் தெரிவித்தார்.

கனடா, மாலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதி இலங்கை தொடர்பான இப்பிரேரணையை சமர்ப்பித்திருந்தன.

இதையடுத்து அல்பேனியா, ஆஸ்திரியா, கோஸ்டாரிகா, நியூசிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சில, இப்பிரேரணையில் திருத்தத்தை ஏற்படுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீளச் சமர்ப்பித்திருந்தன.

அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதை உறுதி செய்யுமாறும் குறித்த பிரேரணையினூடாக இலங்கை அரசு கோரப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் முழு பங்கேற்புடன், முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது இந்தத் தீர்மானத்தின் மிக முக்கிய கோரிக்கையாகும்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை பாதிக்கும் சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுப்புக்காவல்கள் நடத்தப்படுவதை தடுக்குமாறும் பிரேரணை பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் பிரேரணை வலியுறுத்துகிறது.

இலங்கையின் உறுதிமொழிகளை ஐக்கிய இராச்சியம் பாராட்டியதுடன், வாக்குறுதிகளை உறுதியான நடவடிக்கைகளாக மாற்றவும் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் முன்னேற்றத்தையும், பொருளாதார மீட்சியையும் சீனப் பிரதிநிதி பாராட்டினார்.

இலங்கையின் இறையாண்மை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கான ஆதரவை மீண்டும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், கொரியா குடியரசு மற்றும் ஜப்பான் என்பன இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகளை வரவே வரவேற்று, ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஆதரித்தன.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor