அரசியல்உள்நாடு

வாகன இலக்கத்தகடுகள் வழங்கும் பணியில் தாமதம் – காரணத்தை விளக்கிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க

புதிய வாகன இலக்கத்தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் இன்று (08) விளக்கினார்.

வாய்வழி மூல கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை 165,512 வாகன இலக்கத்தகடுகள் வழங்கப்படவில்லை என்று கூறினார்.

வாகன இலக்கத்தகடுகளை வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

“வாகன இலக்கத்தகடுகளை வழங்குவதில் நாங்கள் திட்டமிட்டதை விட நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது.

புதிய இலக்கத்தகடுகளில் 07 சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இலங்கையில் இந்த 07 அம்சங்களை சோதனை செய்வதற்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்தோம்.

அவர்கள் சுமார் மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டனர். அவற்றில் 06 மட்டுமே செய்ய முடியும் என்று அவர்கள் கூறினர்.

எனவே, 07வது சோதனையை சர்வதேச அளவில் நடத்த வேண்டியிருந்தது.

அதனால்தான் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு நிலைமையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளித்துள்ளன.” என்றார்.

இதேவேளை, புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Related posts

மூதூர் பொலீஸ் நிலையத்தின் சிறுவர் தின நிகழ்வு.

editor

வாகன இறக்குமதி – பாதிப்பு ஏற்படாது – மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க

editor

இந்திய உயர்ஸ்தானிகர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்

editor