உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி, நாவலடியில் கார் விபத்து – இப்ராகீம் உயிரிழப்பு

ஓட்டமாவடி – நாவலடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று (8) புதன்கிழமை ஓட்டமாவடி – நாவலடி இராணுவ முகாமுக்கு முன்பாக வைத்து இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பகுதியில் இருந்து வயல் வேலைக்காக துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது அவ்வீதியால் வந்த கார் மோதியதில் வயோதிபர் மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் மரணமடைந்த நபர் ஓட்டமாவடி – 1 மர்கஸ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய சீனி முகம்மது முகம்மது இப்ராகீம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரணமடைந்த நபரின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த ஐவர் கைது

மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது

அமைச்சர் பிமல் ரத்நாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விஜயம்

editor