உள்நாடுபிராந்தியம்

மாத்தறையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

மாத்தறையில் நேற்று (07) இரவு பொலிஸாரின் நிறுத்த உத்தரவை மீறி பயணித்த காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மாத்தறை வெல்லமடம பகுதியில் பொலிஸாரின் சைகையை மீறி குறித்த வாகனம் பயணித்துள்ளது.

இந்நிலையில் பொலிஸார் காரை நோக்கி பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் கைவிடப்ப்ட நிலையில் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த காரில் இருவர் பயணித்திருந்த நிலையில் இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

காரின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இனி இலக்கத் தகட்டில் மாகாணக் குறியீடுகள் இல்லை !

இந்த வார இறுதியில் மின்வெட்டு இல்லை

அதாவுல்லா, ரவூப் ஹக்கீம் விசேட சந்திப்பு – கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாவுல்லா – முஷாரப் முஸ்லிம் காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில்

editor