உள்நாடுபிராந்தியம்

ஹுங்கம பகுதியில் தம்பதியினர் கொல்லப்பட்ட சம்பவம் – நால்வர் கைது

ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கூரிய ஆயுதங்களால் தம்பதியினர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (07) காலை கைது செய்யப்பட்டதாக ஹூங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதான பிரதான சந்தேக நபர் “அதுபெலேன பிந்து” என்ற புனைப்பெயரில் அறியப்படுகிறார்.

அவர் அந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர் என்பதும் தெரியவந்துள்ளது.

ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இரட்டைக் கொலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் திறக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் முதலாவது, பூர்வீக நூதசாலை!

விமானத்தில் பெண் பயணி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது

editor

தேர்தலுக்கு முன்னர் ஆணைக்குழு கலந்துரையாடலில்