உள்நாடுபிராந்தியம்

மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு!

களுத்துறை, பேருவளை, மக்கொன, தியலகொட பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அனர்த்தம் இன்று செவ்வாய்க்கிழமை (07) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மக்கொன, தியலகொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய மீனவர் ஆவார்.

இதன்போது படகில் இருந்த மற்றுமொரு மீனவரும் மின்னல் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

மாணவர்களை அழைத்து வர அவுஸ்திரேலியா நோக்கி விஷேட விமானம்

சில அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி

கோதுமை மா விநியோகத்தில் ஈடுபடும் பிரதான இரு நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் யார் வழங்கியது? அநுரகுமார திஸாநாயக்க