உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான தானியங்கி துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

காலியின் மாபலகம பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட, பேனா போன்ற வடிவிலான அரை தானியங்கி துப்பாக்கியுடன் 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகொட பொலிஸாரால் நடத்தப்பட்ட சோதனையின் போதே ​​அரை தானியங்கி துப்பாக்கியுடன் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கியுடன் இரண்டு தோட்டாக்கள் மற்றும் ஐந்து பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முன்னர் ஒரு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

டொலர் தட்டுப்பாட்டினால் வெள்ளை சீனிக்குத் தட்டுப்பாடு

பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை

கொவிட் 19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்க அமைச்சரவை அனுமதி