உள்நாடுகாலநிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கையில் 10000 ஐ கடந்த கொரோனா தொற்று

மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர்

அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் உண்மை வெளியானது