பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த முன் எச்சரிக்கை அறிவிப்பானது இன்று (06) இரவு 11 மணிவரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
உதாரணமாக பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தொலைபேசி பாவணையை தவிர்த்தல், மின்சாதன பொருட்களை பாவிப்பதை தவிர்த்தல், மரங்களின் கீழ் நிற்பதையும், வயல் நிலங்களில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.