உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

நாளைய தினம் (06) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கடும் காற்று மற்றும் பலத்த மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 223 பேர் கைது

மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி

பாடசாலை மாணவர்களின் பைகளை அரசு சோதனை செய்யும்