உள்நாடு

காங்கேசன்துறை, நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை தினமும் நடைபெறும் – கடைத் தொகுதியும் (Duty Free) அறிமுகம்

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து நாட்களிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதி முதல் இந்த மாதம் 28ஆம் திகதி வரையில் நாளாந்தம் குறித்த கப்பல் சேவை இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் செவ்வாய்க் கிழமை தவிர்ந்த வாரத்தின் ஏனைய ஆறு நாட்களும் குறித்த சேவை இடம்பெற்றுவந்தது.

இந்நிலையில் பண்டிகை காலத்தில் அனைத்து நாட்களிலும் சேவையை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இக்கப்பல் சேவையில் தீர்வை அற்ற கடைத் தொகுதியும் (Duty free) புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

-கஜிந்தன்

Related posts

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு தொடர்பிலான அறிவிப்பு

ஜனாதிபதி அநுர கடந்த 6 மாதங்களில் எவ்வித சேவையும் செய்யவில்லை – நாமல் எம்.பி

editor

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை