”வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் தொனிப் பொருளில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை முதலாம் கட்டை சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள கட்டிடத்தில் நேற்று (04) பி.ப 1.00 மணியளவில் இத் திறப்பு விழா இடம்பெற்றது.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடத்தொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ. ராஜீவன், பவானந்தராஜா இளங்குமரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.
தொடர்ந்து அலுவலக கட்டடத்தினை திறந்து வைக்குமாறு அமைச்சரினால் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்களான சந்திரகுமார் கருணரூபன் மற்றும் கவியரசி ஆகியோர் அழைக்கப்பட்டு அவர்களே நாடாவை வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அலுவலக புத்தகத்தில் கையொப்பம் இட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கு ஏற்றப்பட்டது.
மங்கள விளக்குகளை அந்தணர், விருந்தினர்கள், கட்சி ஆதரவாளர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து கபிலன் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ரஜீவன், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் உரையாற்றினர்.