உள்நாடு

பஞ்சிகாவத்தையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலும் ஒருவர் கைது

துப்பாக்கிச் சூட்டை நடத்தி கொலை செய்ய முற்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய சந்தேக நபர் நேற்று (04) மருதானை பொலிஸ் பிரிவில் உள்ள அபேசிங்காராம வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் 22 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கடந்த மாதம் 6 ஆம் திகதி மருதானை பொலிஸ் பிரிவில் உள்ள பஞ்சிகாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 299 பேர் பூரணமாக குணம்

இம்முறை O/L பரீட்சைக்கு அமரும்போது முகக்கவசம் கட்டாயமில்லை

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 581 ஆக உயர்வு