உள்நாடு

கைதானார் மனம்பேரியின் மைத்துனர்

தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்த சம்பத் மனம்பேரியின் மைத்துனர் இன்று (04) கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் இன்று மதியம் மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவால் பியகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பெக்கோ சமனின் அனைத்து நிதி விவகாரங்களையும் அவர் நிர்வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சந்தேகநபரிடம் இருந்து விற்பனைக்காக தயாராக இருந்த 555 கிராம் ஹெரோயின், கைத்துப்பாக்கி மற்றும் மெஹசின் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் அறிவுறுத்தலின் பேரில் அதன் பொறுப்பதிகாரி லிண்டன் சில்வா முன்னெடுத்து வருகிறார்.

Related posts

கடை ஒன்றில் மதிய உணவு வாங்கிய சட்டத்தரணி – கரட் கறியில் புழு

editor

‘ஜனாதிபதியின் பேச்சும் செயலும் ஒத்துபோகவில்லை”

அரசுக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம்