இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்த மின்சாரக் கட்டண உயர்வு முன்மொழிவு குறித்த முடிவை, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இந்த மாதத்தின் இரண்டாவது வார இறுதிக்குள் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
CEB, மின்சாரக் கட்டணத்தில் 6.8% அதிகரிப்பை முன்மொழிந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் PUCSL-க்கு கோரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, கிழக்கு மாகாணத்தில் வாய்மூல கருத்து பெறுதலை PUCSL கடந்த மாதம் (செப்டம்பர்) 18 அன்று ஆரம்பித்தது.
நாட்டின் 8 மாகாணங்களிலிருந்து பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்டுள்ள நிலையில், 500க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றுள்ளதாக PUCSL ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு கருத்து பெறுவதற்கான இறுதி அமர்வு ஒக்டோபர் 8 அன்று நடத்தப்பட உள்ளதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
PUCSL, பொதுமக்களின் கருத்துகளை ஆய்வு செய்து வரும் நிலையில், மின்சார சபை எரிபொருள் வாங்குவதற்கான செலவு, மின் உற்பத்தி நிலைய செலவு, விநியோக செலவு, மற்றும் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான நிதி ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள உள்ளது.
அனைத்து விடயங்களையும் பரிசீலித்து, மின்சாரக் கட்டண திருத்தம் குறித்த இறுதி அறிக்கை வெளியிடப்பட உள்ளது.