உள்நாடுபிராந்தியம்

பாடசாலையில் விசேட நிகழ்ச்சி – மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞன் கைது

அநுராதபுரம், தந்திரிமலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞன் ஒருவன் தந்திரிமலை பொலிஸாரால் வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தந்திரிமலை பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞன் ஆவார்.

தந்திரிமலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற விசேட நிகழ்ச்சியின் போது இளைஞன் ஒருவன் மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்துள்ளதாக தந்திரிமலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞனிடமிருந்து 02 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இளைஞன் கையடக்கத் தொலைபேசிகளை பழுதுபார்ப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

போதை மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் சுகயீனமுற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தந்திரிமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பொறுப்பு மிக்க ஆட்சிக்காக வேண்டி அணி திரள்வோம் – சஜித் பிரேமதாச

editor

ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

editor

அரச நிதியில் மோசடி – முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு விளக்கமறியல்!

editor