வகைப்படுத்தப்படாத

அனுர சேனாநாயக்க பிணையில் விடுதலை

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

றக்பி வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை  சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்க கடந்த வருடம் மே மாதம் 23 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதற்கமைய அவர் ஒருவருடத்திற்கும் அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Serena Williams fined for damaging match court

சம்பாயோ மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு