உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் சிக்கிய 4.5 கிலோ கிராம் தங்கம்

கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் நேற்று (01) காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நான்கு (04) கிலோகிராம் நானூற்று ஐம்பத்து நான்கு (454) கிராம் தங்கத்தை கடத்த முயன்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் ஒரு டிங்கி (01) படகையும் கைப்பற்றப்பட்டனர்.

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், நேற்று (01) காலை கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனம் நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஒரு சந்தேகத்திற்கிடமான (01) டிங்கி படகை சோதனை செய்தனர்.

அந்த டிங்கியின் மீன்பிடி வலையில் பதின்மூன்று (13) சந்தேகத்திற்கிடமான ஈய எடைகள் காணப்பட்டன, மேலும் மேற்கொண்ட சோதனையின் போது, நுணுக்கமாக தயாரிக்கப்பட்டு ஈய எடைகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயற்சித்த சுமார் நான்கு (04) கிலோகிராம் நானூற்று ஐம்பத்து நான்கு (454) கிராம் தங்கம் மற்றும் ஒரு டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி ஏலத் தோட்டம் மற்றும் ஆனவாசலை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேக நபர்கள், தங்கம் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

உண்மையான பௌத்தர்களாகிய நாம் மக்களை போதைப்பொருள் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்

இரா.சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2674 ஆக உயர்வு