வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் தென்மேற்கு பாகத்தில் மழையுடன் கூடிய காலநிலை ஓரளவுக்கு தீவிரம் பெறக்கூடுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ. தெற்கு, மத்திய, வட மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யலாம். குறிப்பாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா, ,ரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் சில இடங்களில் 73 மில்லி மீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

பிற்பகல் கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக திணைக்களம் இன்று காலை வெளிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ලංකාව ඉහළ මැදි ආදායම් ලබන රටක් බවට ශ්‍රේණිගත කරයි – ලෝක බැංකුව

Mathews magic sees Lanka home in nail-biter against West Indies

காத்திருப்புப் பட்டியலில் உள்ள பிள்ளைகளுக்கு பாடசாலைகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை