உலகம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று (01) இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.

ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. 

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.

படுகாயமடைந்த 150 இற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Related posts

ஈரான் உயர் நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு – 2 நீதிபதிகள் பலி

editor

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம் | வீடியோ

editor

ஹஜ் சென்ற அக்கறைப்பற்று நபர் மரணம்