உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

28 மில்லியன் ரூபாவிற்கும் அதிகளவான பெறுமதி கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம் குறித்து வெளியிடத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஓய்வுபெற்ற இராணுவ கேணலான நெவில் வன்னியாராச்சி, வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையான போதே கைது செய்யப்பட்டார்.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சையில் காலி, யாழ்ப்பாணத்திற்கு முதலிடம்

editor

வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 20% ஆல் வீழ்ச்சி

editor

அனர்த்த நிலைமையை தமிழில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

editor