நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் நாளை (03) மூடப்படும் என்று கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படுவதாக திணைக்களம் கூறுகிறது.
சட்டத்தை மீறும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.