சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு
மருதமுனை பொது நூலகம் மற்றும் கே.எம்.சி. பாலர் பாடசாலை இணைந்து ஒழுங்கு செய்திருந்த சிறுவர் சிறப்பு நிகழ்வு நூலக மண்டபத்தில் நேற்று புதன்கிழமை (01) வெகு சிறப்பாக நடைபெற்றது.
நூலகர் எஸ்.எம்.ஆர். அமீனுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ. ரி.எம். றாபி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி, சித்திரக் கண்காட்சி, கதை சொல்லும் நிகழ்ச்சி, நூலக அறிமுகம் போன்றவை இடம்பெற்றதுடன் நிகழ்வில் பங்கேற்ற 51 சிறுவர்களுக்கும் பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் நூலகப் பணியாளர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
-அஸ்லம் எஸ்.மெளலானா