உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருது நூலகத்தில் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்வுகள் இன்று நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் தலைமையில் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் சாய்ந்தமருது அல்ஹிதாயா சிறுவர் பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுவர் புத்தகக் கண்காட்சி, நூலக ஊழியர்களின் கதை சொல்லும் அமர்வு மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் ஏ.எல்.எம். மொஹமதின் சுவாரஸ்யமான செயற்பாடுகள் இடம்பெற்றன.

இங்கு சிறுவர்களின் திறமைகளும் வெளிப்படுத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சிறுவர்களுக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

-அஸ்லம் எஸ்.மெளலானா

Related posts

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு பிணை

editor

கொரோனா; இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் இன்று