உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் இவ்வாறு சிவப்பு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

அதில் “பிரதேச சபையின் அனுமதியின்றி தங்களால் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை உடன் நிறுத்தவும். மீறினால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவீர்கள்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதேச சபையினால் இந்த சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

-கஜிந்தன்

Related posts

தீப்பிடித்த கெப் வண்டிக்குள் சடலம்

editor

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் – சந்தேகநபராக பெயரிடப்பட்ட ‘பொடி லெசி’

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு