சட்டவிரோதமாக வாகன உதிரிப்பாகங்களை பொருத்தி உருவாக்கப்பட்ட 10 கோடி ரூபா பெறுமதியான V8 ரக சொகுசு வாகனம் ஒன்றை தம்வசம் வைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று புதன்கிழமை (01) அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.