நமது நாடு மற்றைய நாடுகளிடையே நல்ல அங்கீகாரத்தை பெற்று வருவதாகவும் அதனால் நட்பு வர்த்தகத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்தார்.
சீன அனுசரனையுடன் தெரிவுசெய்யப்பட்ட 13 மருத்துவமனைகளில் சுகாதார வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், தர்கா நகர பிராந்திய வைத்தியசாலையில் ஒரு பில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மூன்று மாடிகள் கொண்ட நோயாளர்கள் பராமரிப்பு வளாகம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நேற்று (29) திறந்து வைக்கப்பட்டது.
இந்த 03 மாடி கட்டிட தொகுதியில் 04 நோயாளருக்கான படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு, 96 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் மற்றும் மகப்பேறு வார்டுகள் உட்பட 04 வார்டுகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவு உட்பட பல துறைகள் உள்ளன.
இந்த வார்டு வளாகத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற உபகரணங்களை அமைச்சகம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சுகாதார மூன்று மாடிகள் கொண்ட புதிய வார்டு தொகுதியை திறந்து வைத்த பிறகு சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சிகிச்கைக்கு வந்த முதலாவது நோயாளரை பதிவு செய்தார்.
மேலும் புதிய வார்டு தொகுதியையும் அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அமைச்சர், இந்த மூன்று மாடி புதிய வார்டு தொகுதியை சீன மக்கள் குடியரசின் உதவியுடன், சுமார் 70 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட தர்கா நகர பிராந்திய வைத்தியசாலை கொண்டிருக்கும் சுகாதார வசதிகளுடன் சேர்த்து இதனை அத்தியாவசிய கட்டிடமாக இதனை இணைத்துக்கொள்ள
முடியும் என தெரிவித்தார்.
தர்கா நகர பிராந்திய மருத்துவமனையின் தற்போதைய சுகாதார வசதிகளைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மொரட்டுவ பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சி
வழங்குவதற்குத் தேவையான சிகிச்சை பிரிவுகளை களுத்துறை போதனா மருத்துவமனையில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த மாணவர்கள் இந்த மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள மருத்துவமனைகளின் வசதிகளைப் பயன்படுத்தி தங்கள் கல்வி அறிவைப் பெற முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மருத்துவமனைக்குத் தேவையான மனித வளத்தை வலுப்படுத்தவும், நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை படிப்படியாக பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.50 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
எதிர்காலத்தில் சுகாதார சேவையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என்றும், நாட்டின் நாட்டில் பொருளாதார வளர்ச்சியின விளைவுகளள் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன்று நமது நாடு உலகில் உயர்ந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்றும், உலகின் பல நாடுகள் இலங்கை அரசாங்கத்துடன் நட்புறவில் ஈடுபட்டுள்ளன என்றும், நாட்டின் நல்லெண்ணம் அதிகரித்து வருவதாகவும் சுகாதார மற்றும்
வெகுஜன ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தால் (NIHS) நிர்வகிக்கப்படும் தர்கா நகர பிராந்திய மருத்துவமனையானது 38,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மூன்று மாடி கட்டிடத் தொகுதி மூலம் மேலும் களுத்துறை மற்றும் பேருவளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் நெரிசலைக் குறைப்பதன் மூலம் களுத்துறை மாவட்டத்தில் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்தவும் உதவும்.
சீன அரசாங்க உதவித் திட்டத்தின் கீழ் பேருவளை தர்கா நகர பிராந்திய மருத்துவமனை, அளுத்கம மருத்துவமனை, சம்மாந்துறை மருத்துவமனை, ஏறாவூர், பொத்துவில், கராப்பிட்டி, பொலன்னறுவை, பதவிய, வலஸ்முல்ல, கலவானா, மஹியங்கனை ரிகில்லகஸ்கட மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
சுகாதார அமைச்சகம் இந்த நிகழ்வில் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திமா ஹெட்டியாராச்சி, தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் கே. நந்தகுமாரன், துணைப் பணிப்பாளர் நிபுணர் டாக்டர் சரித் ஹெட்டியாராச்சி, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சுதேச மருத்துவ நிபுணர் டாக்டர் குமார விக்ரமசிங்க, சுனில் கலகம, பிரபாதீப யோகச்சந்திர, களுத்துறை போதனா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மதுபாஷினி கருணாரத்ன, தர்காநகர பிராந்திய மருத்துவமனையின் பொறுப்பதிகாரி என்.பி. ரணதுங்க, இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு. சாங் யாங் உள்ளிட்ட குழுவினர் மற்றும் நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
வீடியோ