உள்நாடுபிராந்தியம்

சிறுவர் தினத்தை முன்னிட்டு மரநடுகை வேலைத்திட்டம்!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, “உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் சுற்றாடல் மற்றும் மரநடுகை வேலைத்திட்டம் இன்று (01) புதன்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு குழுவின் அமைப்பாளர் எம்.வை.மஃறுப் தலைமையில் சம்மாந்துறை அல் – முனீர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை அல் – முனீர் வித்தியாலயம் சுற்றுப்புறத்தை பசுமையமாக்கும் நோக்கில், மரநடுகை நிகழ்வும், உலக சிறுவர் தினத்தின் முக்கியத்துவங்கள், போதைவஸ்து பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்கள் சம்பந்தமாக விழிப்புணர்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர் கலந்து கொண்டதுடன், சம்மாந்துறை அல் – முனீர் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.அப்துல் றஹீம், பிரதி அதிபர் எம்.சீ.முபாறக் அலி, உதவி அதிபர்களான எம்.ஏ.சீ.ஹனீறா, ஏ.எஸ்.ஏ.ஹஸ்பீயா, சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் வி.எம்.முஹம்மட் , பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

தொழிற்சாலை ஊழியர்கள் 1400 பேரிற்கு அதிகமானவர்களுடைய PCR பரிசோதனைகள்

இலங்கையில் இதுவரை 1196 பேர் பூரண குணம்

Build Sri Lanka 2025 சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை ஜனாதிபதி அநுர பார்வையிட்டார்

editor