உள்நாடு

வாகன இறக்குமதி குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவல்

இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்கான வெளிநாட்டு பிரிவு செயல்திறன் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிகபட்ச வாகன இறக்குமதி செலவு கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவான நிலையில், அதன் எண்ணிக்கை 255.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

2025 ஆம் ஆண்டில் இதுவரை ஒவ்வொரு மாதமும் நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக மேற்கொள்ளப்பட்ட செலவு விபரம் பின்வருமாறு..

(மில்லியன் டொலர்களில்)

ஜனவரி – 29.1

பெப்ரவரி – 22.3

மார்ச் – 54.0

ஏப்ரல் – 145.6

மே – 125.2

ஜூன் – 169.6

ஜூலை – 206.0

ஓகஸ்ட் – 255.7

Related posts

மின்வெட்டுக்கான சாத்தியம் இல்லை

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று

🔴 JUST IN : எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க