வசீம் தாஜுதீன் மரணமடைவதற்குச் சற்று முன்னர் அவரது காரைத் பின் தொடர்ந்த வாகனத்தில் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட “கஜ்ஜா” என்ற புனைபெயருடைய அனுர விதானகமே இருந்ததை காவல்துறை இன்று (செப்டம்பர் 30) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தகவல் கஜ்ஜாவின் கொலை தொடர்பான விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக பதில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. மினுர சேனாரத் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கஜ்ஜாவின் கொலையைத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்டு இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் ‘பேக்ஹோ சமன்’ என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.