உள்நாடு

சதீஷ் கமகேவுக்கு பிணை – வௌிநாடு செல்வதற்கு தடை

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், பதில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (30) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சந்தேகநபர் வௌிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

Related posts

அனைத்து மாவட்டங்களதும் இறுதி முடிவுகள்

இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை

பத்தரமுல்லை : நான்கு மாடி கட்டிடத்தில் தீ