அரசியல்உள்நாடு

சபரகமுவ ஆளுநர், இந்தோனேசிய தூதுவர் இடையேயான சந்திப்பு!

சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டோபிங் (Dewi Gustina Tobing) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்றையதினம் (30) இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, சப்ரகமுவ மாகாணத்தின் சுற்றுலா, இரத்தினக்கல் கைத்தொழில், கலாச்சார விடயங்கள் உள்ளிட்ட பல துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, சப்ரகமுவ மாகாண ஆளுநர், இந்தோனேசிய தூதுவருக்கு நினைவு சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

இதன்போது சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனிதா, ஆளுநரின் செயலாளர் சஞ்சீவ கொடெல்லாவத்த, இலங்கைக்கான இந்தோனேசிய தூதரக அமைச்சின் ஆலோசகர் லைலால் கே. யூனியர்டி
(Lailal K. Yuniarti) மற்றும் ஆலோசகர் யாடி சூரியாஹாடி (Suriahadi) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

‘இடுகம’ நிதியத்தின் மீதி 1128 மில்லியனாக அதிகரிப்பு [PHOTOS]

இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேசிய ஆலோசணைக் குழு

எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அமுலாகும் சாத்தியம்