உள்நாடுபிராந்தியம்

வாணி விழாவும் போட்டி நிகழ்ச்சிகளும்

மூதூரில் இந்து சமய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் போட்டி நிகழ்ச்சிகளும் வாணி விழாவும் இன்று (29) திங்கட்கிழமை மூதூர் இந்து இளைஞர் மன்றத் கட்டிடத் தொகுதியில் தலைவர் திரு. சி. சந்துரு அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

மூதூர் பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திரு. பே. நகுலேஸ்குமார் அவர்களின் வழிநடத்தலில், மூதூர் பிரதேச அறநெறி மாணவர்கள் கலந்து கொண்டு இந்து சமய விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையிலான போட்டி நிகழ்ச்சிகளும் வாணி விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, இந்து சமயத்தின் பண்பாடுகள் மற்றும் விழுமியங்களைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளை வழங்கினர்.

ஏற்பாட்டாளர்கள், பங்கேற்ற மாணவர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் இதனை பாராட்டினர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

பூஜித மற்றும் ஹேமசிறி ஆகியோரின் விசாரணைகள் நிறைவு

இனவாதம், மதவாதமற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் – இம்ரான் மஹ்ரூப் எம்.பி

editor

சீராகும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம்