உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருள் விற்பனை – தம்பதியினர் தங்கியிருந்த மூன்று வீடுகளில் சோதனை

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக நாவலப்பிட்டியவில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் தங்கியிருந்த மூன்று வீடுகளை இன்றும் பொலிஸார் சோதனையிட்டனர்.

இதன்போது குறித்த வீடுகளில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினர் கடந்த 25 ஆம் திகதி நாவலப்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நாவலப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் கணவனை 7 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவில் விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதி கிடைத்திருந்தது.

அதேநேரம் ஐந்து மாத கர்ப்பிணியான மனைவி எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 22 வயதான கணவரை அழைத்துக்கொண்டு, அவர்கள் தங்கி இருந்த மூன்று வீடுகளை நேற்றும், இன்றும் பொலிஸார் சோதனைக்குட்படுத்தினர்.

இதன்போது இரு வீடுகளில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரான ஆண் இரு திருமணங்கள் செய்துள்ள நிலையில், முதல் மனைவிக்கு 15 மாத குழந்தையொன்று உள்ளமையும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை – பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

editor

SLPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள்

பயணக்கட்டுப்பாடு : இன்று அல்லது நாளை தீர்மானமிக்கது