உள்நாடுபிராந்தியம்

லொத்தர் சீட்டிழுப்பு கடையை அகற்ற நடவடிக்கை – பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர்

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட எம்.பி.சீ.எஸ்.வீதியில் நடாத்தப்பட்டு வருகின்ற லொத்தர் சீட்டிழுப்பு கடையை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த லொத்தர் சீட்டிழுப்பு மாணவர் சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் எனும் அச்சநிலை தோன்றுகிறது.

இதனால் அந்த கடையை அவ்விடத்திலுருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் கபூர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகாரனின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இது குறித்து தவிசாளரும் உறுப்பினரும் லொத்தர் சீட்டிழுப்பு கடை உரிமையாளரை சந்தித்து பேசியுள்ளனர்.

அவ்விடத்தில் லொத்தர் சீட்டிழுப்பு வியாபாரம் செய்வதற்கு சபை அனுமதி வழங்காது என தவிசாளர் அறிவித்துள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் தெரிவித்தார்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

கொழும்பு துறைமுக நகரில் இலங்கையர்களுக்கும் வேலைவாய்ப்பு 

“ சகோதரத்துவத்தை தொடர்ந்தும் சேதப்படுத்த ஒரு சிறிய இனவாதக் குழுவுக்கும் நாம் இடமளித்தல் கூடாது” பெருநாள் வாழ்த்துச் செய்தியில் சஜித்

வீட்டிலிருந்து உணவு பெற முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு அனுமதி

editor