அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

தங்காலை கார்ல்டன் இல்லத்தில் மஹிந்தவை சந்தித்த ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

கதிர்காமம் சென்று கொழும்புக்கு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்திற்கு சென்று அவருடன் சுமுகமாக கலந்துரையாடியுள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரமேஷ் பத்திரண ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறையில் இருந்த சந்தர்ப்பத்தில் தமக்கு ஆதரவை வழங்கியமைக்காக ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்த நிலையில், மஹிந்த ராஜபக்‌ஷவின் நலன் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் நீண்ட நேரம் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை நீக்கும் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், கொழும்பில் வழங்கப்பட்டிருந்த உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வௌியேறிய மஹிந்த ராஜபக்‌ஷ ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் வசித்து வருகின்றார்.

அவரை சந்திப்பதற்கு அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் கார்ல்டன் இல்லத்திற்கு சென்ற வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை

editor

இலங்கையர்கள் 278 பேர் நாடு திரும்பினர்

இதுவா இளைஞர்கள் எதிர்பார்த்த மாற்றம் ? நிமல் லான்சா

editor