உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் ஊடகவியலாளர்களிற்கான விழிப்புணர்வு நிகழ்வு

சர்வதேச தற்கொலை தடுப்பு தின நிகழ்வுகளின் தொடர்ச்சியாக வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களிற்கான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது தற்கொலை தொடர்பாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் செய்தி அறிக்கையிடலில் பின்பற்ற வேண்டிய விடயம் தொடர்பாகவும் மனநல வைத்திய நிபுணர் மதுசி செனவிரத்தின மற்றும் வவுனியா பொதுவைத்தியசாலை மனநல வைத்தியர் சி.சுதாகரனாலும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை மனநல வைத்திய அதிகாரி தி.வைதேகியின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்பு நிகழ்வில் வவுனியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள், ஊடகத்துறை சார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.

Related posts

இலங்கை மத்திய வங்கியில் நிதி மோசடி – முன்னாள் கணக்காளர் கைது!

editor

மன்னார் நானாட்டானில் கடற்படை வீரரின் சடலம் மீட்பு!

editor

இன்றும் சமையல் எரிவாயு விநியோகம் இல்லை – லிட்ரோ